News September 21, 2024
வாணியம்பாடியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் சின்ன கண்ணு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 25, 2025
ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் நடத்திவர் மீது வழக்கு

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப் பகுதியில் (நேற்று ஏப்ரல் 24 மாலை) உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்திய பாங்கு ஷாப்பிங் பகுதியை சேர்ந்த ரமியுல்லா வயது (52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News April 24, 2025
திருப்பத்தூர்: கேக் வெட்டிய ஆசிரியர்கள் மீது அதிரடி

திருப்பத்தூர், சின்னவரிகம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சுதாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஏப்.,22 அன்று தங்களது திருமண நாளை முன்னிட்டு பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலான நிலையில், மாவட்ட கல்வி அதிகாரி இருவரையும் முறையே உதயேந்திரம் மற்றும் வெங்கிளி பள்ளிக்கு அதிரடியாக இடம் மாற்றியுள்ளார். *உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு பகிரவும்*