News August 7, 2024

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…

image

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், சிபிஐ சின்னத்தையும், அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புவதாகவும், வாட்ஸ்அப் அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்கும்படி சிபிஐ அறிவுறுத்தியுள்ளது. PLS SHARE IT

Similar News

News November 22, 2025

காந்த கண்ணழகி கீர்த்தி சுரேஷ்

image

விஜய் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படம் மூலம் புதிய உயரத்தை தொட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக உள்ள கீர்த்தியின் ‘ரிவால்வர் ரிட்டா’ படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் புரோமோஷனோடு சேர்த்து அவர் போட்ட புதிய போட்டோக்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்திழுக்கிறது.

News November 22, 2025

சி.வி.ராமன் பொன்மொழிகள்

image

*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது. *அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு. *ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிப்புக்கான திறவுகோலாகும். *ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் தொடங்குகிறது.

News November 22, 2025

20 ஆண்டுகளுக்கு பின் முக்கிய பொறுப்பை இழந்த நிதிஷ்

image

10-வது முறையாக நிதிஷ் குமார் CM-ஆக பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதில் 20 ஆண்டுகளாக நிதிஷிடம் இருந்த உள்துறை DCM சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு DCM விஜய் குமாருக்கு வருவாய் மற்றும் நில சீர்த்திருத்த துறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட துறைகளை CM தன்னிடம் வைத்துள்ளார்.

error: Content is protected !!