News March 29, 2025
வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் 101 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 101 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.
Similar News
News April 9, 2025
தி.மலையில் ICICI வங்கியில் நிதி ஆலோசகர் வேலை

தி.மலையில் இயங்கி வரும் ICICI வங்கியில் நிதி ஆலோசகருக்கான 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 25-60 வயதுக்குள் இருக்கும் எல்லா பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேர வேலையான இதற்கு SSLC முடித்திருந்தால் போதுமானது. வரும் ஜூன் 11ஆம் தேதி வரை இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 9, 2025
ஆரி எம்பிராய்டரி, ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக தாட்கோ மற்றும் தனியார் அகாடமி இணைந்து சென்னை வேளச்சேரியில் டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளி கைத்தொழில் பயிற்சி வழங்குகின்றன. 18-30 வயதினருக்கான இந்த 30 நாள் பயிற்சிக்கான தங்கும், உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். விண்ணப்பிக்க: [www.tahdco.com] இந்த தகவலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
News April 9, 2025
திருவண்ணாமலையில் தமிழ் கட்டாயம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். வருகின்ற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.