News March 29, 2025
வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.
Similar News
News November 25, 2025
பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார பேரணியை, ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும்
தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP ஆகியோர் இன்று (நவ.25) துவக்கி வைத்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உடன் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News November 25, 2025
தருமபுரி வழியாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து

பெங்களூர் எஸ்வந்த்பூர் மெஜஸ்டிக் வழித்தடத்தில் இருந்து பானாச்வடி, கார்மிலாரம், ஓசூர், தர்மபுரி செல்லும் அனைத்து ரயில்களும் 25/11/2025 இன்று ஒரு நாள் மட்டும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் Kr புரம், ஜோலார்பேட்டை, சேலம் வழியாக செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. தருமபுரி மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 04.12.2025 வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 25 நாட்கள் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. எனவே பள்ளி படிப்பை முடித்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயனடையலாம்.


