News March 29, 2025
வாட்டிவதைக்கும் வெயில்: அச்சத்தில் மக்கள்

கோடைகாலம் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர், திருத்தணி போன்ற இடங்களில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. மார்ச் மாதமே முடியாத நிலையில் 100 டிகிரி செல்சியஸ் பதிவானதால் வருகின்ற நாட்கள் இன்னும் அதிகமாக வெப்பம் பதிவாக கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளார்.
Similar News
News December 3, 2025
திருவள்ளூர்: அடுத்தடுத்து 2 வீட்டில் கொள்ளை!

திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமத்தில், வெளியூர் சென்றிருந்த 4 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்தனர். இதில் இரண்டரை பவுன் தங்க நகைகள், ரூ.10,000 மற்றும் வெள்ளிக் கொலுசு திருடப்பட்டன. மேலும், பூண்டி ஒன்றியத்தில் நெற்களம் அமைக்கும் பணியில் இருந்த 500 கிலோ இரும்பு கம்பிகளும் திருடு போயின. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் காரணமாக இன்றும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 3, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (03.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


