News April 15, 2024

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

Similar News

News September 16, 2025

ஓசூர் மக்களுக்கு அடுத்தடுத்த குட் நியூஸ்!

image

ஓசூர் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, பேரிகை–பாகலூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2300 ஏக்கரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஓசூர் மக்களுக்கு & தெற்கு பெங்களூரு மக்களுக்கும் ஏற்றுமதி–இறக்குமதி வசதி தரும். சாலை இணைப்புகள் வலுவாக உள்ளதால் வளர்ச்சி வேகமாகும் என அரசு நம்புகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நிலம் கையகப்படுத்தல் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 16, 2025

அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

image

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17726970>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

News September 16, 2025

கிருஷ்ணகிரி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000

image

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். <<17726978>>தொடர்ச்சி! <<>>SHARE IT

error: Content is protected !!