News April 17, 2024

வாக்கு எண்ணும் மையங்களில் கேமரா

image

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி, எல்இடி டிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 11, 2025

தி.மலை கோயிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம்!

image

திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோயிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயியில் (டிச.11) இன்று நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News December 11, 2025

தி.மலை: இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி!

image

திருவண்ணாமலை–போளூர் சாலையில் 2020ல் நடந்த விபத்தில் ஹரி உயிரிழந்த வழக்கில், முதலில் 18 லட்சமும் பின்னர் மேல்முறையீட்டில் 23 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால், இன்று நீதிமன்ற அதிகாரிகள் சென்னையிலிருந்து போளூர் சென்ற 204 தடம் எண் அரசு பேருந்தை, ஆரணி டவுன் பகுதியில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட்டது.

News December 11, 2025

தி.மலை: சுயதொழில் தொடங்க SUPER IDEA! ரூ.5 லட்சம் மானியம்!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் செயலி’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!