News April 16, 2024
வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை பாதுகாப்பு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிரண் குமாரி பாசி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
Similar News
News December 5, 2025
கிருஷ்ணகிரியில் புளியமரங்கள் வெட்டுவதை எதிர்த்து போராட்டம்!

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை–புலியூர் சாலை அகலப்படுத்தும் பணியின் பெயரில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரங்கள் நூற்றுக்கணக்காக முறைகேடாக வெட்டப்படுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை குறைந்த மதிப்பில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து வரும் டிச.8ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. என இன்று (டிச.5) அறிவிக்கப்பட்டது.
News December 5, 2025
கிருஷ்ணகிரியில் 110 பேர் கைது!

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் பூபதி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 110 பேரை போலீசார் இன்று (டிச.5) கைதுசெய்தனர்.
News December 5, 2025
கிருஷ்ணகிரி: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க


