News April 11, 2024
வாக்குப்பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கு பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.
Similar News
News December 14, 2025
சிவகாசியில் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளியான மதியழகன் (55). இவர் தீராத வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அல்போன்ஸ் மேரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 14, 2025
விருதுநகர்: 3422 வழக்குகளுக்கு தீர்வு.. ரூ.13.94 கோடி இழப்பீடு

விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 2024ல் நடந்த விபத்தில் பலியான ஸ்ரீவி.யைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் பிரசாத் குடும்பத்திற்கு ரூ.39 லட்சம் இழப்பீடு, 2018ல் ஸ்ரீவி. அருகே நடந்த கார் விபத்தில் பலியான ஐடி ஊழியர் ஹரிஹரசுதன் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு என மாவட்டத்தில் 3422 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13.94 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடபட்டது
News December 14, 2025
விருதுநகர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

விருதுநகர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


