News November 25, 2024

வாக்காளர் பட்டியல் முகாமில் 17,205 பேர் விண்ணப்பம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2391 வாக்குச்சாவடி மையங்களில், 2 நாள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக 17,205 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 633 பேர் வாக்காளர் பட்டியல் பெயர்   சேர்க்க விண்ணப்பித்தனர்.

Similar News

News July 5, 2025

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தி.மலை மாணவி

image

தி.மலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே உள்ள உடையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கவிதா, இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் இணையும் முதல் பழங்குடியின மாணவி என்ற சாதனையை பெற்று அசத்தியுள்ளார். அரசு பள்ளியில் படித்த இவர் 12ஆம் வகுப்பில் 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஆசிரியர்களின் உதவியுடன், உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமும் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். ஷேர் பண்ணுங்க.

News July 5, 2025

பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர<<>> நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & தி.மலை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04175-223001) அழைக்கலாம். *உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கட்டாயம் பகிருங்கள்*

News July 5, 2025

தி.மலை: தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

image

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க் மூலம் அப்ளை செய்து<<>> இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் தி.மலை மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<16949793>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!