News February 17, 2025
வாக்காளர் பட்டியலில்: 33,000 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் செய்யவும் கடந்த 3 மாதங்களாக பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். அதன்படி கோவை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்க 9,328 பேரும், நீக்கம் செய்ய 6,306 பேரும், பிழைகள் திருத்தம் செய்ய 18,244 பேர் என மொத்தம் 33,878 பேர் விண்ணப்பித்தனர் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
Similar News
News January 3, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (03.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
கோவை: புதிய மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு!

கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியாற்றிய கண்ணன் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
News January 3, 2026
கோவையில் சிறுநீர் கழிக்க சென்றவர் பலி!

கோவை மாவட்டம் பீளமேடு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர், அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் சிறுநீர் கழிக்க இன்று காலை தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். அப்போது திடீரென கால்வாய்க்குள் விழுந்து அவர் உயிரிழந்தார். பீளமேடு போலீசார் நேரில் ஆய்வு செய்தபோது அவர் மரணமடைந்தது தெரியவந்தது. தற்போது போலீசார் உயிரிழந்தவர் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.


