News April 25, 2025

வாகனம் மோதி நர்சிங் மாணவி பலி

image

கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (18), இவர் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாருடன் புதுக்கோட்டை சென்று விட்டு திரும்பியுள்ளார். பின்னர் அருகிலிருந்த ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு ரோட்டை அவர் கடக்க முயன்றபொழுது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியதில் பிரியங்கா படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 11, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் அரசு & அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு பயிலும் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய ,சீர் மரபினர், முதுகலை பாலிடெக்னிக் போன்ற படிப்பு பயிலும் முன்றாண்டு இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி கல்வியில் உதவி தொகை 2025-26 கல்வி ஆண்டில் கல்லூரி மூலம் வழங்கப்படுகிறது www.://umis.tn.gov.in விண்ணப்பிக்க கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்

News December 11, 2025

புதுகை: கரை ஒதுங்கிய மீனவர் உடல்!

image

மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணி சேவியர் (45), பாஸ்கர் (44). இவர்கள் நேற்று முன்தினம் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு திடீரென பழுதான நிலையில் சேவியர் நிலைதடுமாறி கடலில் விழுந்து மூழ்கினார். இதையடுத்து போலீசார் அவரது உடலை தேடிய நிலையில் புதுக்குடி கடற்கரையோரம் மிதந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

News December 11, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!