News April 25, 2025

வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

image

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக அய்யர் மலையைச் சேர்ந்த சண்முக சுந்தரத்திற்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, சண்முக சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில், சண்முக சுந்தரம் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார்

Similar News

News January 11, 2026

கரூர்: போன் காணாமல் போச்சா? இனி கவலையே வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கே <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 11, 2026

மனைவி பிரிந்த சோகம்: கரூரில் வாலிபர் விபரீத முடிவு!

image

வேலாயுதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (26). இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து கௌதம் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர்,வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 11, 2026

கரூர் அருகே விபத்தில் ஒருவர் பலி!

image

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!