News January 24, 2025

வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம்: முன்னாள் அமைச்சர்

image

புகழுரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Ex அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டோம் என்றார். புகழூர் கதவணை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News

News July 5, 2025

கரூர்: இலவச புகைப்படம் மற்றும் வீடியோ பயிற்சி

image

கரூரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவசமாக புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவு பயிற்சி வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதிற்கிடையிலானோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு (04324-248816) அழைக்கவும்.

News July 5, 2025

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனி சேர்ந்தவர் வெற்றிவேல் (41). இவர் கரூர் விநாயகர் கோவில் தெரு, ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வீடு கட்டுமானத்தில் சென்ட்ரிங் வேலை சக ஊழியர்களுடன் செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி மேலே உள்ள மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கிதில் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்டு கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 5, 2025

வங்கியில் அதிகாரி பணி: நல்ல சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். கடைசி நாள் 24.7.25 ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!