News January 24, 2025
வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம்: முன்னாள் அமைச்சர்

புகழுரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக Ex அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டோம் என்றார். புகழூர் கதவணை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திறக்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News November 8, 2025
கரூர்: ADMK-வில் ஐக்கியம்! ஷாக்கில் DMK

கரூர் மாவட்ட திமுக-வைச் சேர்ந்த முன்னாள் தாந்தோணி நகர செயலாளர் ரவி, முன்னாள் நகர துணை செயலாளர் மகாதேவன் (ம) முன்னாள் வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இது கரூர் திமுக-வினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியுள்ளது.
News November 8, 2025
கரூர்: GAS சிலிண்டர் இருக்கா?

கரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News November 8, 2025
தோகைமலை அருகே அலப்பறை.. தட்டி தூக்கிய போலீஸ்

தோகைமலை அருகே ராமச்சந்திரன், பூவரசன் ஆகிய இருவரும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திக்கொண்டு அலப்பறை செய்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.


