News February 18, 2025
வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
Similar News
News December 24, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
திண்டுக்கல் கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

திண்டுக்கல்லில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள்அனைத்து வாக்குச்சாவடி மையங 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய தினங்களில் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் சரவணன் அறிவிப்பு!
News December 24, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிக்கிய 5.700 கிலோ கஞ்சா!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டபோது 5.700 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


