News January 2, 2025
வள்ளுவரை பார்க்க கட்டணமா?..அவமதிக்கும் செயல்!

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் வள்ளுவருக்கு சிலை அமைக்க 1979-ல் எம்ஜிஆர் ஆட்சியில் அடிக்கல் நாட்டிய வரலாறை திமுக மறைக்கிறது. குமரி கண்ணாடி பாலத்தில் வள்ளுவரை தரிசிக்க கட்டணம் வசூலிக்கும் எண்ணம் வியாபாரத்தனம் மட்டுமல்ல, திருவள்ளுவரை இழிவுபடுத்தும் செயல், விவேகானந்தரை நேசிக்கும் மக்களை அவமதிக்கும் செயல்” என்றுள்ளார்.
Similar News
News November 3, 2025
9 நாட்களுக்குப்பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

பெருமழை காரணமாக கடந்த 9 நாட்களாக திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்து கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் கோதை ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிமாக தண்ணீர் கொட்டுகிறது. இதனால் திற்பரப்பியின் துவக்கத்தில் உள்ள இரண்டு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபட்டுள்ளனர்.
News November 2, 2025
குமரி: பக்தர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு <
News November 2, 2025
குமரி: தனியார் பாரில் அதிரடி சோதனை

நித்திரவிளை போலீசாருக்கு நேற்று கல்லு விளையில் உள்ள பார் ஒன்றில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 44 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முத்துக்குமார், சிமியோன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


