News September 28, 2024
வள்ளியூரில் மாபெரும் கபடி போட்டிக்கு அழைப்பு

நெல்லை மாவட்ட வள்ளியூர் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் ஆண்டு வழக்கறிஞர்கள் பங்குபெறும் மாநில அளவிலான மாபெரும் பகல் மற்றும் இரவு கபடி போட்டி இன்று (செப்.28) மற்றும் நாளை மறுநாள் (செப்.29) வள்ளியூர் கலையரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் நெல்லை ஏ ஆர் ரகுமான் தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News November 20, 2025
நெல்லை: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பசுக்கிடை விளை காமராஜர் மேற்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் செஞ்சி லெட்சுமி (57). இவருக்கு நீரழிவு நோய் அதிகமாக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே வரும்போது தலைசுற்றி மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
நெல்லை: ரயில்வே வேலை., மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 20, 2025
நெல்லை: மின் கம்பத்தில் மோதி புது மாப்பிள்ளை பலி

திருப்புடைமருதூரை சேர்ந்தவர் சங்கர் (29). இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு பணிபுரிந்து பைக்கில் வீட்டிற்கு சென்ற போது வெள்ளாங்குழி உப்பூர் பகுதியில் மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


