News February 3, 2025
வளர்ப்பு மகளின் திருமணத்தில் கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்

நாகையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது நாகை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சுனாமியில் மீட்டகப்பட்ட குழந்தைகளான சவுமியா மற்றும் மீனாவை அரவணைத்து காப்பகத்தில் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று (பிப்.2) இரண்டாவது மகள் மீனாவிற்கு, வங்கி ஊழியர் மணிமாறன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது ராதாகிருஷ்ணன் கண்கலங்கினார்.
Similar News
News April 21, 2025
காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

நாகை மாவட்டம் கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
நாகை: ரூ.25000 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். Share It
News April 21, 2025
நாகை மாவட்ட காவல்நிலைய எண்கள்

▶புதுபட்டினம் – 04364-268452, ▶தலைஞாயிறு – 04369-270450, ▶மணல்மேடு – 04364-252426, ▶திட்டச்சேரி – 04366-234100, ▶வாய்மேடு – 04369-270450, ▶வலிவலம் – 04366-247229, ▶வெளிபாளையம் – 04365-242268, ▶செம்பானர்கோவில் – 4364-282427, ▶ வேதாரண்யம் – 4369-250450, ▶கீழையூர் – 4365-265475, ▶நாகப்பட்டினம் நகரம் – 4365-242450, ▶வேளாங்கண்ணி – 4365-263100 ஷேர் பண்ணுங்க.