News June 27, 2024
வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (27.06.2024) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 22, 2025
வேலூர்: தேர்வு இல்லாமல் அரசு வங்கியில் வேலை

வேலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. எழுத்து தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், <
News December 22, 2025
இந்தியா முழுவதும் ஒலித்த வேலூரின் குரல்

இந்தியாவின் மிக பிரபலமான பிண்ணனி பாடகியான வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கிய இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார். நித்தம் நித்தம் நெல்லு சோறு, பாரதி கண்ணம்மா போன்ற பாடல் மிகவும் பிரபலமாவை. பல விருதுக்கு சொந்தக்காரரான இவர் தனது 77வது வயதில் உயிரிழந்தார்.
News December 22, 2025
வேலூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


