News December 31, 2024
வளர்ச்சி பணிகள் கண்காணிப்புக்குழு கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனைப்பட்டா, தார் சாலை வசதி போன்ற குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 8, 2025
ஈரோடு மாவட்ட காவலர் இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 7, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
News November 7, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

சாலையில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு, முன் ஓட்டுநர் உரிமம், காப்பீடு, வாகனப் பதிவு போன்ற அனைத்து ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். ஓட்டும்போது வேகத்தைக் கட்டுப்படுத்துவது, மிதமான வேகத்தில் ஓட்டவும், அதிவேகத்தில் செல்வதை தவிர்ப்பதும், சாலை விதிகளைப் பின்பற்றுவது, ஓட்டுநர் கவனம் சிதறாமல் இருப்பது, என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


