News September 13, 2024
வர்த்தக சங்க பொன்விழா மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் வருகின்ற 29ஆம் தேதி பொன்விழா ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. வர்த்தக சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் பொன்விழா ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அவருக்கு சால்வை வழங்கி மரியாதை செலுத்தினார்கள். வர்த்த சங்க செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் உடன் இருந்தன.
Similar News
News November 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 16, 2025
புதுகை: குரூப்-2 போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு!

புதுகை மாவட்டத்தில் குரூப்-2, 2ஏ போட்டிக்கு இலவச பயிற்சி வகுப்பு (நவ.18) நடைபெறுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான போட்டி தேர்வுக்கு 645 காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்ந்து பயன்பெற 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், குரூப் 2, 2a தேர்வின் முதல் நிலை தேர்வு கூட நுழைவுச்சீட்டு உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நேரில் தொடர்பு கொள்ளும் மாறு கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
புதுகை: வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

புதுகை, விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு புதுகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சங்கர லட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு, மானிய உரங்களை பிற உரங்களும் இணைத்து விற்பனை செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளார்.


