News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News January 9, 2026
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் நாளை ஜன.10 அன்று மிக கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜன-11 அன்றும் மழை இருக்குமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நாளை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 9, 2026
செங்கல்பட்டில் பரபரப்பு!

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து விழுந்து சிறுவன் நவீன் பலியானார். படுக்கையறை ஜன்னலில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால், சோபாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
News January 9, 2026
செங்கல்பட்டு : ரு3000 பொங்கல் பரிசு… புகார் எண் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜன. 8) முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. டோக்கன் விநியோகம் முடிந்த நிலையில், ரேஷன் கார்டில் உள்ள யார் வேண்டுமானாலும் கடைக்குச் சென்று பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் புகார்கள் இருப்பின் 044-27426872 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


