News August 24, 2024
வரும் 28ஆம் தேதி பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் ஆறு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வரும் 25ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. முதல் நாள் ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து இரு நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளது.
Similar News
News December 27, 2025
காஞ்சி: தாயை தற்கொலைக்கு தூண்டிய மகன்!

உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(70). இவரது மனைவி வசந்தா(65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வீட்டின் பாகம் பிரிப்பதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர்களது மகன் சங்கரும், அவரது மனைவி சாந்தியும் வசந்தாவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த வசந்தா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
News December 27, 2025
காஞ்சிபுரம்: திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை!

உத்திரமேரூர் ஒன்றியம் அண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மணிகண்டன் (25). டிரைவராக வேலை செய்து வந்த இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் வயிற்று வலிக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இவர் இறந்தார்.
News December 27, 2025
காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (26.12.2025) முதல் நாளை காலை (டிச.27) இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


