News August 10, 2024
வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி – ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் பருவ மழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோய் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி வரும் 30ஆம் தேதி வரை மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு போடப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (ஆக.09) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
சிவகங்கை: காவலர் தேர்வு மைய வரைபடம் வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (நவ-9) நாளை சிவகங்கை, காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு வீரர் தேர்வு நடைபெறும். 5 மையங்களான அழகப்பா கல்லூரிகள், டாக்டர் உமையாள் ராமநாதன் கல்லூரி, கம்பன் கற்பகம், நியூ மகரிஷி வித்யா மந்திர் ஆகியவற்றில் 4329 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். பழைய/புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்து வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News November 8, 2025
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

சிவகங்கை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
சிவகங்கை: வேன் மோதி ஒருவர் பலி

மதுரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள மாதவராயன்பட்டி கிராமத்தில் இன்று (நவ-8) காலை தேனியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு சென்ற டெம்போ டிராவலரும், திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பட்டது. இதுக்குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை.


