News May 29, 2024

வருசநாடு: திருவிழாவில் மண்டை உடைப்பு!

image

வருசநாட்டை சேர்ந்தவர் அறிவழகன். காளியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு மேளதாளத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தகராறில் சூரியபிரகாஷ் என்பவர் ஹாரன்அடித்ததை அறிவழகன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரியபிரகாஷ் கல்லால் அறிவழகன் மண்டையை அடித்து உடைத்துள்ளார். அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சூரியபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 21, 2025

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று‌ காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க –

News April 21, 2025

தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124

▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226

▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234

▶️தேனி வட்டாட்சியர் 4546-255133

▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 21, 2025

தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

image

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!