News December 6, 2024
வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்!

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின்படி, அதிகாரிகள் ரூ.1.30 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
Similar News
News October 21, 2025
BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.32 அடியை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1,100 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் முதல்கட்டமாக ஏரியின் ஐந்து கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 21, 2025
செம்பரம்பாக்கம் ஏரியில் மாலை 4 மணிக்கு நீர் திறப்பு

காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மாலை 4 மணிக்கு நீர் திறக்கப்பட உள்ளது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20.32 அடியை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் திருமுடிவாக்கம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
News October 21, 2025
காஞ்சிபுரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.