News April 4, 2025
வரி செலுத்தாத வீடுகளுக்கு சீல்

குற்றாலம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி வசூலிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வசூலிக்கப்பட்டு இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதி நாள் 31.03.2025 ஆகும் 31.03.2025 வரை காத்திருந்தும் சொத்து வரித்தொகை ரூபாய் 6,20,626/-நிலுவை இருந்ததில் சொத்து வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுஷ்மா தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News December 12, 2025
தென்காசி: பஸ் மோதி விவசாயி பலி

புளியங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி முருகையா (60). இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் ஊருக்கு திரும்பி வருகையில், சங்கரன்கோவில் ரோட்டில் எதிரே வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை GH-ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
தென்காசி: டிச.16ல் இறுதி பட்டியல்.. கலெக்டர் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் கடந்த நவ.4ம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) வரைவு வாக்காளர் பட்டியல், வரும் டிச.16ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89% பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
News December 12, 2025
தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.


