News April 7, 2025
வரி அதிகரிப்பு எதிரொலி: பெட்ராேல் விலை உயருமா?

பெட்ரோல் மீதான கலால் வரியை ₹11இல் இருந்து ₹13-ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ₹8இல் இருந்து ₹10-ஆகவும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால், சில்லரை விலையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது, முன்பு கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோது குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் அளிக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை இதன்மூலம் ஈடுகட்ட இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News April 8, 2025
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்றும் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
News April 8, 2025
6 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹12,000 குறைவு

வெள்ளி விலை கடந்த 6 நாள்களில் கிராமுக்கு 12 ரூபாயும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாயும் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஏப்.8) காலை நேர வர்த்தகப்படி கிராமுக்கு 1 குறைந்து 102க்கும், பார் வெள்ளி 1 கிலோ 1,02,000க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பங்குச்சந்தையில் நிலவும் மந்த நிலை, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
News April 8, 2025
தேர்தல் களத்தை இப்போதே சூடாக்கும் நாதக வேட்பாளர்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில், நாதக சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர்களை சீமான் தேர்வு செய்துள்ளார். ஆயிரம் விளக்கு- களஞ்சியம், வேதாரண்யம்- இடும்பாவனம் கார்த்திக், கீழ்வேலூர்- கார்த்திகா, ஒரத்தநாடு- திருமுருகன், ராமநாதபுரம்- அனீஸ் பாத்திமா, ஸ்ரீரங்கம் – ராஜேஷ், மடத்துக்குளம் – அபிநயா, திருவள்ளூர்- செந்தில்குமார் உள்ளிட்டோர் வேட்பாளராக தேர்வாகி, களத்தில் செயல்பட தொடங்கியுள்ளனர்.