News April 17, 2025

வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

image

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்நாளில் ஸ்ரீ முஷ்ணம் பூவராகவரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..

Similar News

News July 9, 2025

கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

News July 9, 2025

கடலூர்; 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

image

கடலூர் மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>https://www.rrbapply.gov.in<<>> என்ற இணையம் மூலம் ஜூலை 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை சம்பளம்m வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உடனே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 9, 2025

செம்மங்குப்பம்: புதிய கேட் கீப்பர் நியமனம்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மொழி தெரியாதவரை தமிழகத்தில் பணியமர்த்தியது சர்ச்சையான நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த நபர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!