News March 24, 2025

வரலாற்றை பேசும் சென்னராயப் பெருமாள் கோவில்

image

அதியமான் கோட்டையில் தான் இந்த சென்னராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவரோவியங்கள் உள்ளன. இவை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்தவையாகக் கருதப்படுகிறன. இக்கோவில் இன்றளவும் தர்மபுரி மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் சான்றாகவே உள்ளது.

Similar News

News August 31, 2025

தர்மபுரி: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

தர்மபுரி: விபத்தில் பஸ் கண்டக்டர் பரிதாப பலி

image

பென்னாகரம் அருகே, மடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், தனியார் பஸ் கண்டக்டர்.கடந்த, 28ல், தன் பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வண்ணாத்திப்பட்டி அருகே, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 31, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவமுகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த முகாமில் 103 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!