News April 13, 2025

வரலாற்று சிறப்பு மிக்க சங்கரபதி முனீஸ்வரர்

image

காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் அமராவதி புதூர் அருகே அமைந்துள்ள சங்கரபதி முனீஸ்வரர் வரலாற்று சிறப்பு மிக்க தெய்வம். மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களால் பிடிக்கும் முன் அவர்கள் தங்கி இருந்த சங்கரபதி கோட்டைக்கு அருகில் இருப்பதால் சங்கரபதி முனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. இந்த கோயில் இருக்கும் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி தேங்காய் உடைத்து செல்வது வழக்கம்.

Similar News

News November 23, 2025

சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 23, 2025

சிவகங்கை: தம்பி வெட்டிக் கொலை.. அண்ணன் கைது

image

கிழவனூர் பகுதியைச் சேர்ந்த சற்குணம் (53) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில், சற்குணத்தின் அண்ணன் கருப்பையா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அரியராஜ், மாதவன் ஆகியோருக்கு இடையே முன்கூட்டியே இடத் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்தத் தகராறை முன்னிட்டு தான் இந்தக் கொலை நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அரியராஜ் மற்றும் மாதவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 23, 2025

சிவகங்கை: புதிய வாக்காளரா நீங்க.? இங்க பதிவு பண்ணுங்க!

image

சிவகங்கை மாவட்டத்தில் 01.01.2026 ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியாக உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலோ அல்லது<> voters.eci.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாகவோ படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம் என – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!