News September 14, 2024
வரலாற்றில் இன்று

▶ 1948 – போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய இராணுவம் அவுரங்காபாத்தைக் கைப்பற்றியது. ▶ 1997 – ம.பியின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆற்றில் கவிழ்ந்ததில், 81 பேர் உயிரிழந்தனர். ▶ 2005- நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். ▶ 1959 –நிலவின் மேற்பரப்பை அடைந்த உலகின் முதல் விண்கலம் சோவியத்தின் லூனா 2. ▶ ஒவ்வொரு ஆண்டும் செப்.14 ஹிந்தி தினம் கொண்டாடப்படுகிறது.
Similar News
News November 3, 2025
திரிணாமுல் MLA மீது திடீர் தாக்குதல்

மே.வங்கத்தில் திரிணாமுல் MLA ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில், நேற்று இரவு புகுந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மல்லிக் கூச்சலிட்டத்தை அடுத்து, பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, இளைஞரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அபிஷேக் தாஸ் என்ற அந்த இளைஞர், வேலைக்காக மல்லிக்கிடம் பேச வந்ததாக கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சைக்கு பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
News November 3, 2025
தைவானை சீனா ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: டிரம்ப்

சமீபத்தில் தான் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம் செய்வதில் ஒரு புரிதல் ஏற்பட்டது. இந்நிலையில், தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேட்டி ஒன்றில், தான் அதிபராக இருக்கும் வரை சீனா தைவானை ஆக்கிரமிக்காது என்றும், சீன அதிபர் விளைவுகள் பற்றி நன்றாக புரிந்து வைத்துள்ளார் எனவும் கூறினார்.
News November 3, 2025
SIR-க்கு எதிராக SC-யில் திமுக இன்று மனு தாக்கல்

SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று மனு தக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்கிறது.


