News August 4, 2024
வயநாடுக்கு சென்ற நிவராண பொருட்கள்

கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் நிவாரணஉதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது.
Similar News
News November 22, 2025
நீலகிரி: இன்று ஒருநாள் தடை அறிவிப்பு!

நீலகிரி, குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அரசு டவுன் பஸ்கள், ராணுவ வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், 22-ம் தேதி (இன்று) ஒரு நாள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
News November 22, 2025
ஊட்டி: காட்டு மாட்டை வேட்டையாடியவர் கைது

ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் நேற்று முந்தினம் அதிகாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் வழிக்கடவை சேர்ந்த ரேஜி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.