News April 25, 2025
வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜ் (40) கைது செய்யப்பட்டார். மதுபோதையில், வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
சென்னையின் 100 ஆண்டு பழைய போட்டோக்கள்

சென்னைக்கு நூற்றாண்டு கால வரலாறு உள்ளது. தற்போது இருக்கும் கூட்டம் நிறைந்த சென்னை கடந்த 40 ஆண்டுகளில் உருவானது. உங்களுக்காகவே பழைய சென்னையின் மௌன்ட் ரோடு, ஜார்ஜ் கோட்டை, மெரினா பீச், அடையாறு, பாரிஸ் கார்னர், ரிப்பன் பில்டிங், மயிலாப்பூர் தேரோட்டம், சென்ரல் ஸ்டேசன், தாமஸ் மௌன்ட் ஆகியவற்றின் 100 ஆண்டு பழைய போட்டோக்கள் உள்ளன. ஸ்வைப் பன்னி பாருங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்
News April 26, 2025
பெண்கள் உதவி மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

வடசென்னையில் உள்ள பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதுகாப்பாளர் (ரூ.12,000) மற்றும் பன்முக உதவியலாளர் (ரூ.10,000) பணியிடங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் வரும் மே 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 26, 2025
சென்னை விமான நிலையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த <