News January 23, 2025

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களுக்கு தீர்வு

image

புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் புகார்களுக்கு தீர்வு காண, மாவட்ட உள்ளூர் புகார் குழுவின் தலைவரை 8825425745 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 0413-2299500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

புதுவை: கழிவறையில் மயங்கி விழுந்த பெண் பலி

image

திரு-பட்டினம், போலகம் மரைக்காயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி சந்தனமேரி. இவர் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறமுள்ள கழிவறைக்கு சென்ற போது சந்தனமேரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திரு-பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 6, 2025

புதுவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்&மகன்

image

வாழைக்குளம் அருகே உள்ள அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்(46). இவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விஷாலி என்பவருக்கு ஒரு வழக்கிலிருந்து வரவேண்டிய தொகையை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவரும் அவரது தாய் விஜயா என்பவரும் வழக்கறிஞர் சுரேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

News December 6, 2025

புதுச்சேரி: ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் கைது!

image

புதுச்சேரியில் சாலையைக் கடக்க உதவி செய்வது போல நடித்து, 78 வயது மூதாட்டியிடம் இருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்ச பணத்தையும் திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த சாரதா, வள்ளி என்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி காசிக்கு செல்வதற்காக தனது தோழியிடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை திரும்பி வாங்கிக் கொண்டு வரும்போது மூதாட்டியிடம் இருந்து நகையை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!