News January 1, 2025
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு தீருதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 180 பேருக்கு ரூ.2.37 கோடி தீருதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த 28 நபா்களின் வாரிசுதாரா்களில் 11 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 17 பேருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
தளவானூர் அணைகட்டில் ஆட்சியர் ஆய்வு

கோலியனூர் ஒன்றியம் தளவானூர் அணைகட்டில் நீர்வளத்துறை சார்பில் மாநில நிதி திட்டத்தின் கீழ் அணைகட்டு புணரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை ஆட்சியார் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி. உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கபிலன் கலந்துகொணடனர்.
News December 3, 2025
விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.


