News March 24, 2025
வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வழிவகை உள்ளது. எனவே, வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் விவசாயிகள் அருகில் உள்ள வன அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News November 24, 2025
நாமக்கல் தொகுதி QR குறியீடு வெளியீடு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாமக்கல்லில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப தேவையான 96-நாமக்கல் தொகுதிக்கான 2002 வாக்காளர் விவரங்களின் QR குறியீடு நாமக்கல் செய்தி தொடர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம்.
News November 24, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட மொத்தம் 381 மனுக்கள் பெற்றுக்கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நான்கு பயனாளிகளுக்கு ரூ.13,140 மதிப்பில் காதொலி கருவிகளை வழங்கினார்.
News November 24, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர்-24 தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. அதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10ஆக தொடர்ந்து 4வது நாளாக நீடித்து வருகிறது.


