News August 26, 2024
வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தி.மலை மக்களுக்கு பொங்கல் பரிசு !

திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்டவலம் அடுத்த கீரனூர் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தை மாத பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன், ரேஷன் கடை கூட்டுறவு விற்பனையாளரால் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம்.
News January 8, 2026
தி.மலை: இனி பொங்கலுக்கு ஊருக்கு செல்வது ஈசி! CLICK

தி.மலை மாவட்ட மக்களே.., வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா..? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக <
News January 8, 2026
தி.மலையில் தேர்தலை புறக்கணிக்க முடிவு!

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நேற்று(ஜன.7) நடைபெற்றது. இதில், தூய்மைக் காவலர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000, நிலவையில் உள்ள மாத ஊதியம், ரூ.25,000 மேல் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லையெனில் நோட்டாவிற்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


