News August 2, 2024
வத்தலக்குண்டு ஆலமரத்திற்கு கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் மிகப் பழமையான ஆலமரம் உள்ளது. மரத்தின் அடியில் ஓடை முனியாண்டி கோயிலும் உள்ளது. இந்த ஆலமரத்திற்கு, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று யாக வேள்விகள் தொடங்கப்பட்டு புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் ஆலமரத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 10, 2025
திண்டுக்கல்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 10, 2025
திண்டுக்கல்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News December 10, 2025
கொடைக்கானலில் அதிரடி கைது!

கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சுற்றுலா பயணிகளுக்கு போதைக் காளான் வழங்கி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் போதைக் காளான் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


