News April 9, 2025
வத்தலகுண்டு அருகே விபத்து

வத்தலகுண்டு அருகே பைக்கில் வந்த கொண்டு இருந்த மரியராஜ்- ராணி தம்பதி மீது, திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது. இவ்விபத்தில் மனைவி ராணி (54) சம்பவயிடத்திலே உயிரிழந்தார். கணவர் மரியராஜ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 23) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளைப் பெறலாம். திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இதற்காக அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தியுள்ளது.
News November 23, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அந்த வகையில் (நவம்பர் 23) இன்று,”மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தவிர்ப்போம் விபத்தில் இல்லா பயணம் மேற்கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
News November 23, 2025
திண்டுக்கல்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க!


