News August 17, 2024
வதந்தி: திருப்பூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த பெண்கள்

தமிழக அரசின் சார்பில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் மீண்டும் விடுபட்ட பெண்களுக்கு மனுக்கள் வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதனை நம்பி ஏராளமான பெண்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News July 8, 2025
டிகிரி, இன்ஜினியர் படித்தவர்களுக்கு அரசு வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருப்பூரில் வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு <
News July 8, 2025
ரிதன்யா கணவர் ஜாமின் மனு தள்ளுபடி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில்ம் திருப்பூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
News July 7, 2025
திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.