News August 17, 2024
வதந்தி: திருப்பூர் கலெக்டர் ஆபிசில் குவிந்த பெண்கள்

தமிழக அரசின் சார்பில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் மீண்டும் விடுபட்ட பெண்களுக்கு மனுக்கள் வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதனை நம்பி ஏராளமான பெண்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 16, 2025
திருப்பூர்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. ▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். ▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
திருப்பூர் காவல்துறை எச்சரிக்கை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு வங்கி சார்ந்த சேவைகளின் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து பெறப்படும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை, பிற நபர்களுக்கு தெரிவிக்காமல் இருக்க வேண்டும். வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக, பொதுமக்களை ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 16, 2025
திருப்பூரில் வட மாநில வாலிபர்கள் கைது

திருப்பூர் வடக்கு காவல்நிலையை எல்லைக்கட்பட்ட கள்ளம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சோதனை செய்த போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரோஸ், சுசில் குமார் முக்கியா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சீட்டு கட்டு மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.