News August 26, 2024
வண்ண மீன்கள் வர்த்தக மையத்திற்கு முதல்வர் அடிக்கல்

சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் சுமார் 3.93 ஏக்கர் பரப்பளவில் 53.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மைய அமையவுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமையவுள்ள இம்மையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி வைத்து அதன் மாதிரி வடிவத்தை பார்வையிட்டார்.
Similar News
News November 5, 2025
சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

அம்பத்துார் பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். இவர் மூர்த்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது இரண்டாவது கணவர், தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பெண் புகார் அளித்தார். அம்பத்தூர் மகளிர் போலீசார் மூர்த்தியிடம் விசாரித்ததில், சிறுமியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
News November 5, 2025
சென்னை: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்!

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். கடந்த 3ம் தேதி இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் ஒன்று சிறுவனை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் சிறுவனின் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறுவன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News November 5, 2025
சென்னை: 9 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

சென்னை வானகரம் பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் லக்ஷன். நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருநாய் சிறுவனை துரத்தி சென்று கடித்ததில் சிறுவன் கை, கால் & முதுகில் காயம் ஏற்பட்டது. இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


