News April 2, 2025
வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். மே.15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் மைதானம் பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் நீலகிரியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, அங்குள்ள பைக் மீது மோதியது. இதனால் இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சுற்றுப்புற மக்கள் உடனடியாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 24, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (23.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
கோவை வரும் முதல்வர் ஸ்டாலின்

நவ.25, 26-ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். கோவையில் 45 ஏக்கரில் அமைந்த செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்து, தொழிலதிபர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் உடன் கலந்துரையாடுகிறார். பின்னர் ஈரோட்டில் மாவீரன் பொல்லான் மணிமண்டபம் திறப்பு, தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை மற்றும் ரூ.605 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.


