News February 16, 2025

வணிகர் சங்க பேரமைப்பின் மாநில நிர்வாகி நியமனம்

image

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காயல் அகமது சாஹிபு என்பவரை மாநில தலைவர் ரவி நியமித்து அறிவித்துள்ளார். அவருக்கு மண்டல தலைவர் கோடீஸ்வரன், தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் மற்றும் பேரமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 28, 2025

தூத்துக்குடி: மகனுக்கு கத்திக்குத்து.. தந்தை கைது

image

தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி பரமேஸ்வரி குடும்ப தகராறில் கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் முத்தையாபுரத்தில் வசித்து வருகிறார். இசக்கி பாண்டி நேற்று முன்தினம் இரவு மனைவியுடன் தகராறு ஈடுபட்டு, மனைவியை கத்தியால் குத்த பயந்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அவரது மகன் சந்தோஷ் என்ற சிறுவன் காயமடைந்தான். இது சம்பந்தமாக, முத்தையாபுரம் போலீசார் இசக்கி பாண்டியை கைது செய்தனர்.

News November 28, 2025

தூத்துக்குடி: மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

தூத்துக்குடி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News November 28, 2025

தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

error: Content is protected !!