News March 22, 2024

வட சென்னை பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

வட சென்னை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின், பாஜக வேட்பாளராக வழக்கறிஞர் பால் கனகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்த நிலையில், தற்போது 2ம் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Similar News

News April 18, 2025

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதேபோல்,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.

News April 18, 2025

சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு

image

சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மே 19ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 18, 2025

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனித வெள்ளியான இன்று (ஏப்ரல் 18) பெருநகர் மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது வெயில் அடித்தாலும், இன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!