News April 22, 2025
வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

மல்லி அருகே நாகபாளையத்தில்,குருசாமி என்பவரின் குடும்பத்துக்கு பாத்தியப்பட்ட 2.50 சென்ட் நிலத்துக்கான பட்டா சண்முகத்தேவர் மற்றும் தங்கவேல்தேவர் ஆகியோர் பெயரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேறொரு பெயரில் முறைகேடாக பட்டா பதிவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஸ்ரீவி.வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
விருதுநகர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து வரும் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை 16,13,476 கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் டிசம்பர் 11 வரை கணக்கெடுப்பு படிவங்களை பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
சிவகாசி: கண்மாயில் கிடந்த சடலம்

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் சிலோன் காலனி கண்மாய் பகுதியில் முதியவர் சடலம் ஒன்று கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாரனேரி போலீசார் முதியவர் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமர் (78)என்பது தெரியவந்தது. கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
அருப்புக்கோட்டை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி சுலோச்சனா(65) உடன் காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் சென்று விட்டு பைக்கில் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராமசாமிபுரம் பகுதியில் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நிலையில் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


