News September 28, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்த ஆட்சியர்

வேதாரண்யம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வளர்ச்சி திட்டப் பணிகளை நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது திடீரென வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பதிவேடுகள் பராமரிக்கப்படும் இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு அரசு அலுவலர்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று ஊழியர்களிடம் குறைகள் கேட்டறிந்து பொதுமக்களிடம் கனிவாக நடந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
Similar News
News December 10, 2025
நாகை: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
நாகை: மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கீழ்வேளுர் வட்டம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 10-ந்தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடத்தப்பட உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்
News December 10, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு தமிழக அரசு ‘தந்தை பெரியார் விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது சுய விவரம், முகவரி மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட விபரங்களை வரும் டிச.18-க்குள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


