News August 18, 2024
வடக்குத்தாமரைகுளத்தில் ஆட்சியர் ஆய்வு

வடக்கு தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சன்ன இரக நெல்-கோ 55 நெல் ஆதார விதைகள் உற்பத்திப்பண்ணையை ஆட்சியர் அழகு மீனா நேற்று பார்வையிட்டார். விதைப்பண்ணையில் உருவாக்கப்படும் நெல்களின் தரத்தினை எவ்வாறு கண்டறிவது என கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து பறக்கை பகுதியில் வேளாண் உழவர் விற்பனை குழுக்கள் மற்றும் விவசாயிகள் நெல் அறுபடை பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
Similar News
News July 9, 2025
விவேக் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

இருகூர், பீளமேடு பிரிவில் சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 9, 10, 11, 12 தேதிகளில் புறப்படுவது போத்தனூர் வழியாக செல்லும். இருகூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லாது. போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News July 9, 2025
குமரி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<
News July 9, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைபிடிக்கும் 10 ஊராட்சிகளை ஊக்குவித்து தமிழக அரசு சமூக நல்லிணக்க விருதுடன் தலா 1 கோடி ரூபாய் வழங்க உள்ளது. சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் https://tinyurl.com/Panchayataward என்ற இணையதளத்தில் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.